திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 171

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்ஓட்டித் துரத்திட் டதுவலி யார்கொளக்காட்டிக் கொடுத்துஅது கைவிட்ட வாறே.

உரை

வாசனை மிக்க பூக்களைத் தேடிச் சென்று அவற்றிலிருக்கும் தேனைச் சிறிது சிறிதாகச் சேகரித்து, ஒரு மரக்கொம்பில் கொண்டுவந்து சேர்த்து, பெரிய தேனடையாகச் சேமிக்கின்றன தேனீக்கள். ஒரு நாள் அந்தப் பெரிய தேனடையைக் கண்ட மனிதர்கள் வந்து தீப்பந்தங்களால் அவற்றைத் துரத்திவிட்டு, அவை சேமித்து வைத்திருந்த தேனடையைக் கொண்டுபோய்விடுகின்றனர். தேனீயே தேனடையைப் பெரிதாகச் சேமித்து, தானே அதை மனிதர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அதுபோலவே, உயிர்கள் சிறுகச் சிறுக சேகரித்த செல்வங்களும், மற்றவர்கள் கவனிக்குமளவு பெருகியதும், தங்களைவிட வலிமையான மற்றவர்கள் வந்து அவற்றைக் களவாடிச் செல்கின்றனர். எனவே உலகச் செல்வங்கள் எதுவும் எப்போதும் நிலைத்திருப்பதில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    வாசனை மிக்க பூக்களைத் தேடிச் சென்று அவற்றிலிருக்கும் தேனைச் சிறிது சிறிதாகச் சேகரிக்கின்றன தேனீக்கள்,

  • வரி 2

    ஒரு மரக்கொம்பில் கொண்டுவந்து சேர்த்து, பெரிய தேனடையாகச் சேமிக்கின்றன.

  • வரி 3

    ஒரு நாள் அந்தப் பெரிய தேனடையைக் கண்ட மனிதர்கள் வந்து தீப்பந்தங்களால் அவற்றைத் துரத்திவிட்டு, அவை சேமித்து வைத்திருந்த தேனடையைக் கொண்டுபோய்விடுகின்றனர்.

  • வரி 4

    தேனீயே தேனடையைப் பெரிதாகச் சேமித்து தானே அதை மனிதர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடுகிறது; அதுபோலவே உயிர்கள் சேகரித்த செல்வமும் தங்களைவிட வலிமையானவர்களால் களவாடப்படுகிறது, எனவே உலகச் செல்வம் எதுவும் நிலைத்திருப்பதில்லை.

திருமந்திரம் பாடல் #171

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout