திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 170

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னது சாயை தனக்குத வாதுகண்டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்ததுகண்ணது காணும்ஒளி கண்டுகொ ளீரே.

உரை

நம்முடன் வரும் நிழல்கூட நமக்கு உதவாது என்பதைத் தெளிவாகக் கண்டபின்னும், கஷ்டப்பட்டுச் சேர்த்த செல்வங்கள் என்றும் நமக்கு உதவும் என்று நினைத்திருப்பவர்கள் ஏமாளிகளே. நம் உடலோடு ஒன்றாகப் பிறந்த உயிர்கூட நம்மோடு என்றும் நிலைத்திராமல் ஒருநாள் போய்விடும். இப்படி நிலையில்லாத எதன்மேலும் மனத்தை வைக்காமல், நமக்குள்ளேயே மனத்தைச் செலுத்தி, அங்கே ஒளிர்ந்துகொண்டிருக்கும் இறைவனின் திருஒளியை அகக் கண்ணால் கண்டு, என்றும் நிலையானவனான இறைவனை உணர்ந்துகொள்ளுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    நம்முடன் வரும் நிழல்கூட நமக்கு உதவாது என்பதைத் தெளிவாகக் கண்டபின்னும்,

  • வரி 2

    கஷ்டப்பட்டுச் சேர்த்த செல்வங்கள் என்றும் நமக்கு உதவும் என்று நினைத்திருப்பவர்கள் ஏமாளிகளே.

  • வரி 3

    நம் உடலோடு ஒன்றாகப் பிறந்த உயிர்கூட நம்மோடு என்றும் நிலைத்திராமல் ஒருநாள் போய்விடும்.

  • வரி 4

    இப்படி நிலையில்லாத எதன்மேலும் மனத்தை வைக்காமல், நமக்குள்ளேயே மனத்தைச் செலுத்தி, அங்கே ஒளிர்ந்துகொண்டிருக்கும் இறைவனின் திருஒளியை அகக் கண்ணால் கண்டு, என்றும் நிலையானவனான இறைவனை உணர்ந்துகொள்ளுங்கள்.

திருமந்திரம் பாடல் #170

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout