திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 168

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அருளும் அரசனும் ஆனையும் தேரும்பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்மருளும் பினையவன் மாதவ மன்றே.

உரை

நாட்டுக்கு நன்மை செய்யும் அரசனுடைய ஆதிக்கத்தில் இருக்கும் யானைப் படைகளும், தேர்களும், அவன் ஈட்டிய பெருஞ் செல்வங்களும், பின்னொரு நாளில் அவனை வெற்றி கொள்ளும் வேறொருவருக்குச் சொந்தமாகிவிடும். யாருடைய செல்வமாக இருந்தாலும், ஒரு நாள் மற்றவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள். அப்படி வேறொருவர் வந்து எடுத்துக்கொள்ளும் முன்னரே, உலகச் செல்வங்களுக்கெல்லாம் தலைவனான இறைவனைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவனைப் பற்றிய தெளிவு பெற்று உணர்ந்து, அவனுடைய திருவடியைச் சென்று சேர்ந்துவிட்டால், அதன்பிறகு செய்வதற்கு இவ்வளவு கடினமா என்று உயிர்கள் அஞ்சும் அளவிற்கு இருக்கும் மாபெரும் தவங்கள் எதுவும் தேவையில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    நாட்டுக்கு நன்மை செய்யும் அரசனுடைய ஆதிக்கத்தில் இருக்கும் யானைப் படைகளும், தேர்களும், அவன் ஈட்டிய பெருஞ் செல்வங்களும்,

  • வரி 2

    பின்னொரு நாளில் அவனை வெற்றி கொள்ளும் வேறொருவருக்குச் சொந்தமாகிவிடும்; யாருடைய செல்வமாக இருந்தாலும் ஒரு நாள் மற்றவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள்.

  • வரி 3

    அப்படி வேறொருவர் எடுத்துக்கொள்ளும் முன்னரே, உலகச் செல்வங்களுக்கெல்லாம் தலைவனான இறைவனைப் பற்றித் தெரிந்துகொண்டு, தெளிவு பெற்று உணர்ந்து, அவனுடைய திருவடியைச் சென்று சேர்ந்துவிட வேண்டும்.

  • வரி 4

    அப்படிச் சேர்ந்துவிட்டால், அதன்பிறகு இவ்வளவு கடினமா என்று உயிர்கள் அஞ்சும் அளவிற்கு இருக்கும் மாபெரும் தவங்கள் எதுவும் தேவையில்லை.

திருமந்திரம் பாடல் #168

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout