திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 167

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்பாற்றுளிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தீட்டும்கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

உரை

உடலாகிய இந்தத் தோற்பையினுள் உயிராக இருந்து செயல்களைச் செய்து, அதன்மூலம் தன்னுடைய வினைப் பயன்கள் கழிந்தபின், உடல் இயங்கக் காரணமாக இருந்தவன் அதைவிட்டுப் பிரிந்துவிடுகிறான். அதன்பின் வெறும் எலும்பும் தோலுமாகக் கிடக்கும் இந்த உடலைக் காக்கை வந்து கொத்திக் கொண்டு போனால் என்ன? கண்டவர்கள் பிணம் என்று பழித்தால் என்ன? எரித்தபின் எலும்பின்மேல் பால் ஊற்றிச் சடங்கு செய்தால் என்ன? பலரும் வந்து, உயிர் இருக்கும்போது அவன் செய்த செயல்களைப் பழித்துச் சொன்னால் என்ன? புகழ்ந்து பேசினால்தான் என்ன? அவற்றால் அந்த உயிருக்கோ, வெறுமனே கிடக்கும் அந்த உடலுக்கோ, ஒரு பயனும் இல்லை.

வரி வாரியாக

  • வரி 1

    உடலாகிய தோற்பையினுள் உயிராக இருந்து செயல்களைச் செய்து, வினைப் பயன்கள் கழிந்தபின், உடல் இயங்கக் காரணமாக இருந்தவன் அதைவிட்டுப் பிரிந்துவிடுகிறான்.

  • வரி 2

    வெறும் எலும்பும் தோலுமாகக் கிடக்கும் இந்த உடலைக் காக்கை வந்து கொத்திக்கொண்டு போனால் என்ன? கண்டவர்கள் பிணம் என்று பழித்தால் என்ன?

  • வரி 3

    எரித்தபின் எலும்பின்மேல் பால் ஊற்றிச் சடங்கு செய்தால் என்ன? பலரும் வந்து அவன் செய்த செயல்களைப் பழித்தால் என்ன, புகழ்ந்தால்தான் என்ன?

  • வரி 4

    அவற்றால் அந்த உயிருக்கோ, வெறுமனே கிடக்கும் அந்த உடலுக்கோ, ஒரு பயனும் இல்லை.

திருமந்திரம் பாடல் #167

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout