திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 166

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

குடையும் குதிரையும் கொற்றவா ளும்கொண்டிடையுமக் காலம் இருந்து நடுவேபுடையு மனிதனார் போகும்அப் போதேஅடையும் இடம்வலம் ஆருயி ராமே.

உரை

அரசாட்சியும், வலிமையான குதிரைப் படையும், உறுதியான வாளும், செங்கோலும் தாங்கிக்கொண்டு, வாழ வேண்டிய காலம்வரை அரசனாக வாழும் மனிதர்களும், நான்கு பக்கமும் மனிதர்கள் புடைசூழ நடுவே சென்று கொண்டிருக்கும்போதே, அவர்களுடைய உயிர் இடகலை பிங்கலை ஆகிய நாசிகளின் வழியே பிரிந்து, அது அடையவேண்டிய இடத்திற்குச் சென்று அடைந்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    அரசாட்சியும், வலிமையான குதிரைப் படையும், உறுதியான வாளும், செங்கோலும் தாங்கிக்கொண்டு,

  • வரி 2

    வாழ வேண்டிய காலம்வரை அரசனாக வாழும் மனிதர்களும்,

  • வரி 3

    நான்கு பக்கமும் மனிதர்கள் புடைசூழ நடுவே சென்றுகொண்டிருக்கும்போதே,

  • வரி 4

    அவர்களுடைய உயிர் இடகலை பிங்கலை ஆகிய நாசிகளின் வழியே பிரிந்து, அது அடையவேண்டிய இடத்திற்குச் சென்று அடைந்துவிடும்.

திருமந்திரம் பாடல் #166

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout