திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 176

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போதுஅடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்சுடும்பரி சத்தையும் சூழகி லாரே.

உரை

உயிர்கள் உலக ஆசையில் எவ்வளவு செல்வங்கள் சேமித்து வைத்திருந்தாலும், ஒருநாள் அவர்களின் உடலைவிட்டு உயிர் பிரிந்து ஓடிவிடும். உடலைவிட்டு உயிர் வெளியேறும் வழியில் காத்திருந்து அதைக் கவர்ந்துசெல்ல நிற்கும் எம தூதர்களுக்குத் தடையாக இருக்கக்கூடிய ஒரே செல்வம், இறைவனைப் பற்றிய தூய்மையான சிந்தனை மட்டுமே. இறைவனைப் பற்றிய தூய சிந்தனையில் வாழும் உயிர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றைச் சுற்றி வருவதற்குக்கூட எம தூதர்கள் பயப்படுவார்கள். எனவே எப்போதும் உயிர்களைக் காக்கும் இறைவனையே எண்ணியிருந்து, வீணான செல்வங்களின்மேல் ஆசை வைக்காமல் இருக்க வேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் உலக ஆசையில் எவ்வளவு செல்வங்கள் சேமித்து வைத்திருந்தாலும், ஒருநாள் அவர்களின் உடலைவிட்டு உயிர் பிரிந்து ஓடிவிடும்.

  • வரி 2

    உடலைவிட்டு உயிர் வெளியேறும் வழியில் காத்திருந்து அதைக் கவர்ந்துசெல்ல நிற்கும் எம தூதர்களுக்குத் தடையாக இருக்கக்கூடிய ஒரே செல்வம், இறைவனைப் பற்றிய தூய்மையான சிந்தனை மட்டுமே.

  • வரி 3

    இறைவனைப் பற்றிய தூய சிந்தனையில் வாழும் உயிர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றைச் சுற்றி வருவதற்குக்கூட எம தூதர்கள் பயப்படுவார்கள்.

  • வரி 4

    எனவே எப்போதும் உயிர்களைக் காக்கும் இறைவனையே எண்ணியிருந்து, வீணான செல்வங்களின்மேல் ஆசை வைக்காமல் இருக்க வேண்டும்.

திருமந்திரம் பாடல் #176

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout