மேவிய சற்புத்திர மார்க மெய்த்தொழில்தாவிப் பதாஞ்சக மார்கஞ் சகத்தொழிலாவ திரண்டு மகன்று சகமார்கத்தேவியோ டொன்றல் சன்மார்கத் தெளிவே.
பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடலாசற்ற நற்றவம் வாய்மை யழுக்கின்மைநேசித்திட் டன்னமு நீர்சுத்தி செய்தல்மற்றாசற்றல் சற்புத்திர மார்க மாமே.
அறுகாற் பறவை யலர்தேர்ந் துழலுமறுகால் நரையன்னந் தாமரை நீலங்குறுகார் நறுமலர் கொய்வன கண்டுஞ்சிறுகா லரனெறி செல்லுகி லாரே.
அருங்கரை யாவது அவ்வடி நீழல்பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணைவருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாமொருங்கரை வாயுல கேழினொத் தானே.
உயர்ந்து பணிந்து முகந்துந் தழுவிவியந்து மரனடிக் கைமுறை செய்யின்பயந்தும் பிறவிப் பயனது வாகும்பயந்தும் பரிக்கிற் பான்நன்மையி னாகுமே.
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னையென்று தொழுவ னியற்பரஞ் சோதியைத்துன்று மலர்தூவித் தொழுமின் றொழுந்தோறுஞ்சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
திருமன்னுஞ் சற்புத்திர மார்க சரிதையுருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்கருமன்னு பாசங் கைகூப்பத் தொழுதுவிருமன்னு நாடோறு மின்புற் றிருந்தே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1495
1 / 7




