திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1496

ஐந்தாம் தந்திரம்11. சற்புத்திர மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடலாசற்ற நற்றவம் வாய்மை யழுக்கின்மைநேசித்திட் டன்னமு நீர்சுத்தி செய்தல்மற்றாசற்றல் சற்புத்திர மார்க மாமே.

உரை

இறைவனை உண்மையான தந்தையாகப் பாவித்து, அவருக்குப் பூஜை செய்தல், மந்திரங்களைப் பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல், குற்றமில்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப்புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல், அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாகப் படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல் ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமே இல்லாமல் இருந்து செய்வதே, இறைவனின் பிள்ளையாகத் தன்னைப் பாவித்து அவனை அடைகின்ற வழிமுறை ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை உண்மையான தந்தையாகப் பாவித்து, அவருக்குப் பூஜை செய்தல், மந்திரங்களைப் பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல்,

  • வரி 2

    குற்றமில்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப்புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல்,

  • வரி 3

    அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாகப் படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல்,

  • வரி 4

    ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமே இல்லாமல் இருந்து செய்வதே, இறைவனின் பிள்ளையாகத் தன்னைப் பாவித்து அவனை அடைகின்ற வழிமுறை ஆகும்.

திருமந்திரம் பாடல் #1496

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout