தொடர்ந்து படிக்கread this section continuously
மேவிய சற்புத்திர மார்க மெய்த்தொழில்தாவிப் பதாஞ்சக மார்கஞ் சகத்தொழிலாவ திரண்டு மகன்று சகமார்கத்தேவியோ டொன்றல் சன்மார்கத் தெளிவே.
உரைmeaning
உறவினால் உண்மையான தந்தையாக இறைவனையும், அவருக்குப் பிள்ளையாகத் தம்மையும் பாவிக்கின்ற வழிமுறையானது, உடலால் செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் மற்றும் அவற்றைச் சரியாகச் செய்ய இறை சக்தி உடனிருந்து தோழமை வழிமுறையில் மனதுடன் எப்போதும் சேர்ந்திருந்து செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் ஆகிய இந்த இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும், நமது உடலும் மனமும் இவற்றைச் செய்கின்றன என்கின்ற எண்ணமும் நீங்கும்படி செய்து, தோழமை வழிமுறையில் தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு ஒன்றாகச் சேர்ந்து, அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே, உண்மை வழிமுறையில் மேன்மையான நிலையில் கிடைக்கின்ற தெளிவு ஆகும்.
The discipline of taking God, by kinship, as one's true father and taking oneself as his child is one where all the acts one performs with the body, and, joined with them, all the acts performed with the mind, ever together with the divine power that stands by in the way of companionship to make them right, are these two kinds of acts. Letting go of the thought that "we" perform them, and the thought that "our body and mind" perform them, joining as one with that divine power which, by the way of companionship, follows always with oneself, and remaining in the thought that the divine power alone does everything: this is the clarity gained at the highest state within the true discipline.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உறவினால் உண்மையான தந்தையாக இறைவனையும், அவருக்குப் பிள்ளையாகத் தம்மையும் பாவிக்கின்ற வழிமுறையானது, உடலால் செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும்,
The discipline of taking God, by kinship, as one's true father and taking oneself as his child is one where all the acts one performs with the body,
- வரி 2Line 2
அவற்றைச் சரியாகச் செய்ய இறை சக்தி உடனிருந்து தோழமை வழிமுறையில் மனதுடன் எப்போதும் சேர்ந்திருந்து செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும் ஆகிய இந்த இரண்டு விதமான செயல்களைக் கொண்டதாகும்.
and, joined with them, all the acts performed with the mind, ever together with the divine power that stands by in the way of companionship to make them right, are these two kinds of acts.
- வரி 3Line 3
அந்த இரண்டையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும், நமது உடலும் மனமும் இவற்றைச் செய்கின்றன என்கின்ற எண்ணமும் நீங்கும்படி செய்து, தோழமை வழிமுறையில் ஒன்றாகச் சேர்ந்து,
Letting go of the thought that "we" perform them and the thought that "our body and mind" perform them, and joining as one, in the way of companionship,
- வரி 4Line 4
தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற அந்த இறை சக்தியோடு இணைந்து, அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே, உண்மை வழிமுறையில் மேன்மையான நிலையில் கிடைக்கின்ற தெளிவு ஆகும்.
with that divine power which follows always with oneself, remaining in the thought that the divine power alone does everything, is the clarity gained at the highest state within the true discipline.
திருமந்திரம் பாடல் #1495





