திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1494

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்வளங்கனி யொப்பதோர் வாய்மை யினாகுமுளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

உரை

செழுமையாகப் பழுத்த பழத்தைப் போலவே செழுமையாகப் பிரகாசிக்கின்ற தேஜஸான உடலைப் பெற்றிருக்கின்ற அடியவர்களுக்கு, அவர்களுடைய தேகம் செழுமை பொருந்திய பழுத்த பழத்தைப் போல இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த வாய்மை எனும் ஒரு தர்மத்தினால் ஆகும். அந்த அடியவர்களது உள்ளமானது இறைவன்மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்திருப்பதனாலும், அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும், எப்போதும் இன்பத்தோடு இருக்கின்றார்கள். நன்றாகப் பழுத்த பழத்திற்குள் கனிந்திருக்கும் சுவை போலவே, அவர்களின் பழுத்த பழம் போன்ற உள்ளுக்குள் சுவை போல சேர்ந்து தோழமையுடன் நிற்கின்றான் இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    செழுமையாகப் பழுத்த பழத்தைப் போலவே செழுமையாகப் பிரகாசிக்கின்ற தேஜஸான உடலைப் பெற்றிருக்கின்ற அடியவர்களுக்கு,

  • வரி 2

    அவர்களுடைய தேகம் அத்தகைய செழுமை பொருந்திய பழுத்த பழத்தைப் போல இருப்பதற்குக் காரணம், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த வாய்மை எனும் ஒரு தர்மத்தினால் ஆகும்.

  • வரி 3

    அந்த அடியவர்களது உள்ளமானது இறைவன்மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்திருப்பதனாலும், அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும், அவர்கள் எப்போதும் இன்பத்தோடு இருக்கின்றார்கள்.

  • வரி 4

    நன்றாகப் பழுத்த பழத்திற்குள் கனிந்திருக்கும் சுவை போலவே, பழுத்த பழம் போன்ற அவர்களின் உள்ளத்திற்குள் அந்தச் சுவையாகவே சேர்ந்து தோழமையுடன் நிற்கின்றான் இறைவன்.

திருமந்திரம் பாடல் #1494

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout