சன்மார்கந் தானே சகமார்க மானதுமன்மார்க மாமுத்தி சித்திக்கும் வைப்பதாம்பின்மார்க மாவது பேராப் பிறந்திறந்துன்மார்க ஞானத் துறுதியு மாமே.
பாடல் 1488 — உரைVerse 1488 — meaning
உண்மை வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்குத் தானாகவே இறைவன் தோழமையுடன் வழிகாட்டும் நெறிமுறையாகச் சக மார்க்கம் (தோழமை வழிமுறை) இருக்கின்றது. இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற வழியாக இருந்து, முக்திப் பேறு அடைவதற்கும் நினைப்பது அனைத்தையும் செயல்படுத்தி வைப்பதாகவும் இருக்கின்றது. இதற்கு நேர் எதிரான வழியில் செல்பவர்கள் இடைவிடாமல் பிறவி எடுத்து இறந்து, மீண்டும் மீண்டும் மனம் செல்லுகின்ற வழியில் செல்லும்போதும் இறைவன் தோழமையுடன் மறைந்திருந்து, ஒரு காலத்தில் உண்மை ஞானம் உறுதியாகக் கிடைக்கும்படி அருளுவான்.
For practitioners who have gained wisdom on the true path, Saga Margam, the path of companionship, stands as the discipline by which God himself guides them, unasked, as a companion. This alone remains the ever-abiding path, and it is what accomplishes every thought toward attaining liberation. For those who go the opposite way, being born and dying without cease and going again and again wherever the mind leads, God still remains hidden alongside them as companion, and in time graciously grants them true wisdom, firmly.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மை வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்குத் தானாகவே இறைவன் தோழமையுடன் வழிகாட்டும் நெறிமுறையாகச் சக மார்க்கம், அதாவது தோழமை வழிமுறை, இருக்கின்றது.
For practitioners who have gained wisdom on the true path, Saga Margam, the path of companionship, stands as the discipline by which God himself guides them, unasked, as a companion.
- வரி 2Line 2
இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற வழியாக இருந்து, முக்திப் பேறு அடைவதற்கும் நினைப்பது அனைத்தையும் செயல்படுத்தி வைப்பதாகவும் இருக்கின்றது.
This alone remains the ever-abiding path, and it is what accomplishes every thought toward attaining liberation.
- வரி 3Line 3
இதற்கு நேர் எதிரான வழியில் செல்பவர்கள் இடைவிடாமல் பிறவி எடுத்து இறந்து, மீண்டும் மீண்டும் மனம் செல்லுகின்ற வழியில் செல்லும்போதும்,
For those who go the opposite way, being born and dying without cease and going again and again wherever the mind leads,
- வரி 4Line 4
இறைவன் தோழமையுடன் மறைந்திருந்து, ஒரு காலத்தில் உண்மை ஞானம் உறுதியாகக் கிடைக்கும்படி அருளுவான்.
God still remains hidden alongside them as companion, and in time graciously grants them true wisdom, firmly.




