திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1492

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதார சோதனை யானாடி சுத்திகள்மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளிபோதா லயத்துப் புலன்கர ணம்புந்திசாதா ரணங்கெட லாஞ்சக மார்கமே.

உரை

சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆதார சக்கரங்களை ஆராய்ந்து, அதன் வழியாக உடலுக்குள் இருக்கின்ற நாடிகளைச் சுத்தம் செய்து, உடல் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கின்ற பதினாறு கலைகளோடு விண்ணில் இருக்கின்ற ஒளி வடிவமான இறை சக்தியானது கலக்கின்றது. அதன்பிறகு, அறிவின் ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற புலன்களும், கரணங்களும், புத்தியும் தங்களின் இயல்பான செயல்களை இழந்து இறை நிலையைப் பெறுவதே இறைவனோடு தோழமையாக இருக்கின்ற வழிமுறையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆதார சக்கரங்களை ஆராய்ந்து, அதன் வழியாக உடலுக்குள் இருக்கின்ற நாடிகளைச் சுத்தம் செய்து,

  • வரி 2

    உடல் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கின்ற பதினாறு கலைகளோடு விண்ணில் இருக்கின்ற ஒளி வடிவமான இறை சக்தியானது கலக்கின்றது.

  • வரி 3

    அதன்பிறகு, அறிவின் ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற புலன்களும், கரணங்களும், புத்தியும்,

  • வரி 4

    தங்களின் இயல்பான செயல்களை இழந்து இறை நிலையைப் பெறுவதே இறைவனோடு தோழமையாக இருக்கின்ற வழிமுறையாகும்.

திருமந்திரம் பாடல் #1492

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout