திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1491

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

யோகமும் போகமும் யோகியர் காகுமாம்யோக சிவரூப முற்றிடு முள்ளத்தோர்யோகம் புவியிற் புருடாதி சித்தியாமாக மிரண்டு மழியாத யோகிக்கே.

உரை

யோகமும், அதனால் கிடைக்கின்ற பேரின்பமும், யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே, அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கிடைக்கும். யோகத்தில் இறைவனின் ஒளி உருவத்தைத் தமக்குள்ளே தரிசிக்கின்ற யோகியர்களின் உள்ளத்திற்குள் என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு யோகமே, இந்த உலகத்தில் இருக்கின்ற யோகியர்களின் ஆன்மாவிற்கு ஆதியாகிய பரமாத்மாவின் அருள் சக்தியாகக் கிடைக்கும். அந்த அருள் சக்தியால் உடலும் மனமும் ஆகிய இரண்டும் என்றும் அழியாமல் இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    யோகமும், அதனால் கிடைக்கின்ற பேரின்பமும், யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே, அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கிடைக்கும்.

  • வரி 2

    யோகத்தில் இறைவனின் ஒளி உருவத்தைத் தமக்குள்ளே தரிசிக்கின்ற யோகியர்களின் உள்ளத்திற்குள் என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு யோகமே,

  • வரி 3

    இந்த உலகத்தில் இருக்கின்ற யோகியர்களின் ஆன்மாவிற்கு, ஆதியாகிய பரமாத்மாவின் அருள் சக்தியாகக் கிடைக்கும்.

  • வரி 4

    அந்த அருள் சக்தியால் உடலும் மனமும் ஆகிய இரண்டும் என்றும் அழியாமல் இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்.

திருமந்திரம் பாடல் #1491

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout