திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1490

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

யோகமு மாதியி னுள்ளே யகலிடம்யோக சமாதியி னுள்ளே யுளரொளியோக சமாதியி னுள்ளே யுளசத்தியோக சமாதி யுகந்தவர் சித்தரே.

உரை

யோகம் என்று அறியப்படுகின்ற சாதனையானது, ஆதியாக இருக்கின்ற இறைவனின் உள்ளேயே அடங்கி, அண்ட சராசரங்கள் அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்றிருக்கின்றது. அந்த யோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற சமாதி நிலையில், சாதகருக்கு உள்ளே என்றும் நிலைபெற்றிருக்கின்ற ஒளியாக இறைவன் இருக்கின்றான். அந்த ஒளியாகிய இறைவனின் சக்தியை, சமாதி நிலையிலிருந்துகொண்டே அனுபவித்துக்கொண்டு பேரின்பத்திலேயே திளைத்திருக்கின்ற சாதகர்களே சித்தர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    யோகம் என்று அறியப்படுகின்ற சாதனையானது, ஆதியாக இருக்கின்ற இறைவனின் உள்ளேயே அடங்கி இருக்கின்றது;

  • வரி 2

    அண்ட சராசரங்கள் அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்றிருக்கின்றது; அந்த யோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற சமாதி நிலையில்,

  • வரி 3

    சாதகருக்கு உள்ளே என்றும் நிலைபெற்றிருக்கின்ற ஒளியாக இறைவன் இருக்கின்றான்; அந்தச் சமாதி நிலைக்குள்ளேயே இருக்கின்ற அந்த ஒளியின் சக்தியை,

  • வரி 4

    சமாதி நிலையிலிருந்துகொண்டே அனுபவித்துக்கொண்டு பேரின்பத்திலேயே திளைத்திருக்கின்ற சாதகர்களே சித்தர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1490

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout