திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1489

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மருவுந் துவாதெச மார்கமு மில்லார்குருவுஞ் சிவனுஞ் சமையமுங் கூடார்வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகுமுருவுங் கிளையு மொருங்கிழப் போரே.

உரை

தியானத்தின் மூலம் துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற யோக வழிமுறையை அறிந்துகொள்ளாதவர்களும், குருவின் மூலம் ஞானத்தைப் பெறாதவர்களும், இறைவன்மேல் பக்தி செய்யாதவர்களும், இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தைக் கைவிடுபவர்களும் ஆகிய இவர்களுடன் சேர்ந்திருப்பது வீண் என்று திருமகள் அவர்களை விட்டு விலகிவிடுவாள். அவர்களின் உடலும், உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும் அழிந்து, அவை இழக்கப்பட்டுவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    தியானத்தின் மூலம் துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற யோக வழிமுறையை அறிந்துகொள்ளாதவர்களும்,

  • வரி 2

    குருவின் மூலம் ஞானத்தைப் பெறாதவர்களும், இறைவன்மேல் பக்தி செய்யாதவர்களும், இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தைக் கைவிடுபவர்களும் ஆகிய இவர்களை,

  • வரி 3

    இவர்களுடன் சேர்ந்திருப்பது வீண் என்று திருமகள் விட்டு விலகிவிடுவாள்.

  • வரி 4

    அவர்களின் உடலும், உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும் அழிந்து, அவை இழக்கப்பட்டுவிடும்.

திருமந்திரம் பாடல் #1489

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout