தொடர்ந்து படிக்கread this section continuously
அறுகாற் பறவை யலர்தேர்ந் துழலுமறுகால் நரையன்னந் தாமரை நீலங்குறுகார் நறுமலர் கொய்வன கண்டுஞ்சிறுகா லரனெறி செல்லுகி லாரே.
உரைmeaning
ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனைச் சேகரிப்பதையும், இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச்சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலைச் சேகரிப்பதையும், இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களைக் கொய்து மாலையாகக் கோர்த்து இறைவனுக்குச் சாற்றி வணங்கி அருளைச் சேகரிப்பதையும் பார்த்தும், சிறிது காலம்கூடத் தமக்குத் தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.
Even after watching six-legged bees search out honey-bearing flowers and wander gathering their honey, and, in another way, white swans seek out lotus flowers and blue lilies and gather the milk within their stalks, and God's own devotees gather fragrant flowers, string them into garlands, offer them to God, worship him and gather his grace, they still do not go, not even for a little while, on the path that receives the grace of God, who stands as their father, Aran.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனைச் சேகரிப்பதையும்,
Even after watching six-legged bees search out honey-bearing flowers and wander gathering their honey,
- வரி 2Line 2
இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச்சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலைச் சேகரிப்பதையும்,
and, in another way, white swans seek out lotus flowers and blue lilies and gather the milk within their stalks,
- வரி 3Line 3
இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களைக் கொய்து மாலையாகக் கோர்த்து இறைவனுக்குச் சாற்றி வணங்கி அருளைச் சேகரிப்பதையும் பார்த்தும்,
and God's own devotees gather fragrant flowers, string them into garlands, offer them to God, worship him and gather his grace,
- வரி 4Line 4
சிறிது காலம்கூடத் தமக்குத் தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.
they still do not go, not even for a little while, on the path that receives the grace of God, who stands as their father, Aran.
திருமந்திரம் பாடல் #1497





