தொடர்ந்து படிக்கread this section continuously
அருங்கரை யாவது அவ்வடி நீழல்பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணைவருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாமொருங்கரை வாயுல கேழினொத் தானே.
உரைmeaning
சென்று சேருவதற்கு மிகவும் அரியதான எல்லையாக இருப்பது இறைவனின் திருவடிகளின் நிழலாகும். பிறை நிலாவைச் சூடிக்கொண்டிருக்கும் இறைவனின் ஆணைகளே பிறப்பு இல்லாத மாபெரும் நிலையைப் பெறுகின்ற எல்லையாக இருக்கின்றன. தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின் எல்லைகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் நிலைபெற்று வாழுகின்ற உயிர்கள் அனைத்திற்கும், அவற்றின் வினைகளைத் தீர்த்துக்கொண்டு சென்று சேரும் கரையாக இருக்கின்ற ஏழு உலகங்களுக்கும் ஒத்திருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்.
The rare boundary, most difficult of all to reach and enter, is the shadow of God's own sacred feet. It is the very commandments of God, who wears the crescent moon, that stand as the boundary by which the great, birthless state is attained. For all the living beings established in this world according to the bounds of the karmas that come to them by their own deeds, God himself stands equally as father to all seven worlds, the shore to which they go, settling their deeds as they reach it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சென்று சேருவதற்கு மிகவும் அரியதான எல்லையாக இருப்பது இறைவனின் திருவடிகளின் நிழலாகும்.
The rare boundary, most difficult of all to reach and enter, is the shadow of God's own sacred feet.
- வரி 2Line 2
பிறை நிலாவைச் சூடிக்கொண்டிருக்கும் இறைவனின் ஆணைகளே பிறப்பு இல்லாத மாபெரும் நிலையைப் பெறுகின்ற எல்லையாக இருக்கின்றன.
It is the very commandments of God, who wears the crescent moon, that stand as the boundary by which the great, birthless state is attained.
- வரி 3Line 3
தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின் எல்லைகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் நிலைபெற்று வாழுகின்ற உயிர்கள் அனைத்திற்கும்,
For all the living beings established in this world according to the bounds of the karmas that come to them by their own deeds,
- வரி 4Line 4
அவற்றின் வினைகளைத் தீர்த்துக்கொண்டு சென்று சேரும் கரையாக இருக்கின்ற ஏழு உலகங்களுக்கும் ஒத்த தந்தையாக இறைவனே இருக்கின்றான்.
God himself stands equally as father to all seven worlds, the shore to which they go, settling their deeds as they reach it.
திருமந்திரம் பாடல் #1498





