தொடர்ந்து படிக்கread this section continuously
உயர்ந்து பணிந்து முகந்துந் தழுவிவியந்து மரனடிக் கைமுறை செய்யின்பயந்தும் பிறவிப் பயனது வாகும்பயந்தும் பரிக்கிற் பான்நன்மையி னாகுமே.
உரைmeaning
ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும், இறைவனின் திருவடிகளைப் பணிந்து தொழுதும், அவனுக்குச் செய்கின்ற பணிவிடைகளை விரும்பிச் செய்தும், இறைவனின் திருவுருவத்தைத் தழுவிக்கொண்டும், அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும், இறைவனின் திருவடிகளுக்குத் தமது கைகளால் தொண்டுகளைச் செய்தால், அந்தத் தொண்டே தாம் எடுத்த பிறவிக்குக் கிடைக்கின்ற மிகப்பெரும் பயனாக இருக்கும். அப்படிக் கிடைத்த அருளினால் இறைவனைத் தந்தையாகப் பாவித்துத் தொடர்ந்து அந்தத் தொண்டுகளைச் செய்துகொண்டே வந்தால், தந்தையாக இருந்து அதைச் செய்யவைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.
Standing high in conduct, bowing and worshipping at God's sacred feet, gladly performing the services rendered to him, embracing God's own sacred form, and, filled with wonder at the divine experience gained from all this, if one renders service to God's sacred feet with one's own hands, that very service becomes the very highest fruit gained by the birth one has taken. And if, by the grace so gained, one continues taking God as father and performing that service, then God himself, who as father causes it to be done, becomes every good that comes from it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும், இறைவனின் திருவடிகளைப் பணிந்து தொழுதும், அவனுக்குச் செய்கின்ற பணிவிடைகளை விரும்பிச் செய்தும், இறைவனின் திருவுருவத்தைத் தழுவிக்கொண்டும்,
Standing high in conduct, bowing and worshipping at God's sacred feet, gladly performing the services rendered to him, and embracing God's own sacred form,
- வரி 2Line 2
அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும், இறைவனின் திருவடிகளுக்குத் தமது கைகளால் தொண்டுகளைச் செய்தால்,
and, filled with wonder at the divine experience gained from all this, if one renders service to God's sacred feet with one's own hands,
- வரி 3Line 3
அந்தத் தொண்டே தாம் எடுத்த பிறவிக்குக் கிடைக்கின்ற மிகப்பெரும் பயனாக இருக்கும்.
that very service becomes the very highest fruit gained by the birth one has taken.
- வரி 4Line 4
அப்படிக் கிடைத்த அருளினால் இறைவனைத் தந்தையாகப் பாவித்துத் தொடர்ந்து அந்தத் தொண்டுகளைச் செய்துகொண்டே வந்தால், தந்தையாக இருந்து அதைச் செய்யவைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.
And if, by the grace so gained, one continues taking God as father and performing that service, then God himself, who as father causes it to be done, becomes every good that comes from it.
திருமந்திரம் பாடல் #1499





