திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1501

ஐந்தாம் தந்திரம்11. சற்புத்திர மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திருமன்னுஞ் சற்புத்திர மார்க சரிதையுருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்கருமன்னு பாசங் கைகூப்பத் தொழுதுவிருமன்னு நாடோறு மின்புற் றிருந்தே.

உரை

இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலைபெற்றிருக்கும் இறைவனைத் தந்தையாகப் பாவித்துத் தம்மை மகனாகப் பாவிக்கின்ற வழிமுறையே இறைவனை அடைவதற்கு மூலகாரணமாகச் செயல்படுகின்ற வழிமுறை என்று இப்பாடல் உலகத்தவருக்கு அறிவிக்கிறது. கருவிலேயே நிலைபெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு, இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பித் தொழுது வணங்கி, அவனை நினைத்துக்கொண்டே இருப்பதில் நிலைபெற்று, தினந்தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டே இருக்குமாறு, உடல் இருக்கும் வரை வாழுகின்ற உலகத்தவரை இப்பாடல் அழைக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலைபெற்றிருக்கும் இறைவனைத் தந்தையாகப் பாவித்துத் தம்மை மகனாகப் பாவிக்கின்ற வழிமுறையே இறைவனை அடைவதற்கு மூலகாரணமாகச் செயல்படுகின்ற வழிமுறை என்று இப்பாடல் அறிவிக்கிறது.

  • வரி 2

    உடல் இருக்கும் வரையே நிலைபெற்று வாழுகின்ற உலகத்தவரை, இதைக் கேட்குமாறு இப்பாடல் அழைக்கிறது.

  • வரி 3

    கருவிலேயே நிலைபெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி, இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பி இறைவனைத் தொழுது வணங்குமாறு அவர்களை அழைக்கிறது.

  • வரி 4

    அவனை நினைத்துக்கொண்டே இருப்பதில் நிலைபெற்று, தினந்தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டே இருக்குமாறும் அழைக்கிறது.

திருமந்திரம் பாடல் #1501

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout