திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1502

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எளியன தீபமிட லலர் கொய்தலளியின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்பளிபணி பற்றல் பன்மஞ் சனமாதிதளிதொழில் செய்வது தான்றாச மார்கமே.

உரை

தங்களால் இயன்றவரை தீபங்களை ஏற்றிவைத்தல், நறுமணமிக்க மலர்ந்த மலர்களைக் கொய்து சாற்றுதல், இறைவன் இருக்கின்ற இடங்களைச் சாணி பூசி மெழுகி அந்த இடத்தைச் சுத்தமாக வைத்தல், இறைவனின் புகழ்களைப் பாடி வாழ்த்துதல், இறைவன் அமர்ந்துவருகின்ற பல்லக்குக்குச் சேவை செய்வதற்குப் பல்லக்கின் கழிகளைப் பற்றிக்கொண்டு வலம்வருதல், பல வகையான அபிஷேகப் பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்தல் முதலாகக் கோயில்களுக்குத் தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணிபுரிவது தான், இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழிமுறையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தங்களால் இயன்றவரை தீபங்களை ஏற்றிவைத்தல், நறுமணமிக்க மலர்ந்த மலர்களைக் கொய்து சாற்றுதல்,

  • வரி 2

    இறைவன் இருக்கின்ற இடங்களைச் சாணி பூசி மெழுகி அந்த இடத்தைச் சுத்தமாக வைத்தல், இறைவனின் புகழ்களைப் பாடி வாழ்த்துதல்,

  • வரி 3

    இறைவன் அமர்ந்துவருகின்ற பல்லக்குக்குச் சேவை செய்வதற்குப் பல்லக்கின் கழிகளைப் பற்றிக்கொண்டு வலம்வருதல், பல வகையான அபிஷேகப் பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்தல் முதலான,

  • வரி 4

    கோயில்களுக்குத் தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணிபுரிவது தான், இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழிமுறையாகும்.

திருமந்திரம் பாடல் #1502

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout