திருமூலர் அருளிய திருமந்திரம்
12. தாச மார்க்கம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1502–1506 (5 பாடல்கள்)

எளியன தீபமிட லலர் கொய்தலளியின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்பளிபணி பற்றல் பன்மஞ் சனமாதிதளிதொழில் செய்வது தான்றாச மார்கமே.

அதுவிது வாதிப் பரமென் றகலமிதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லைவிதிவழி யேசென்று வேந்தனை நாடுமதுவிதி நெஞ்சிற் றழிகின்ற வாறே.

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறுசிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லியுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்கண்ணவ னென்று கருது மவர்கட்குப்பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

வாசித்தும் பூசித்து மாமலர் கொய்திட்டும்பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்கில்மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலைநேசத் திருத்த நினைவறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1502

1 / 5

0:000:00
12. தாச மார்க்கம்பாடல் 1502

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com