திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1503

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அதுவிது வாதிப் பரமென் றகலமிதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லைவிதிவழி யேசென்று வேந்தனை நாடுமதுவிதி நெஞ்சிற் றழிகின்ற வாறே.

உரை

அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம்பொருள் என்று நினைத்துக்கொண்டு, பரந்து விரிந்து இருக்கின்ற இந்த உலகில் இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக்கொண்டு, அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை. அப்படி இல்லாமல், தங்களுக்கு விதிக்கப்பட்ட வழியில் சென்று, தமக்குள் மறைந்திருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராகத் தேடி அடைகின்ற வழிமுறையையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து, அவர்களை இறைவனிடம் சேர்க்கின்ற வழிமுறை இதுவே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம்பொருள் என்று நினைத்துக்கொண்டு, பரந்து விரிந்து இருக்கின்ற இந்த உலகில்,

  • வரி 2

    இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக்கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை.

  • வரி 3

    அப்படி இல்லாமல், தங்களுக்கு விதிக்கப்பட்ட வழியில் சென்று, தமக்குள் மறைந்திருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராகத் தேடி அடைகின்ற,

  • வரி 4

    அந்த வழிமுறையையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து அவர்களை இறைவனிடம் சேர்க்கின்ற வழிமுறை இதுவே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1503

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout