தொடர்ந்து படிக்கread this section continuously
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறுசிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.
உரைmeaning
காலையிலும் மாலையிலும் மனதால் வழிபாடு செய்து, அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து, அவனையே சிந்தித்துக்கொண்டே இருப்பேன். எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனும், நினைப்பதை அருளுபவனும் ஆகிய அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்குவேன். வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை நாள்தோறும் இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே, இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழிமுறையின்படியே ஆகும்.
Morning and evening I will worship with the mind, and after that, as befits it, worship with the body as well, and go on thinking of him. I will praise and bow to the sacred feet of the one who is ever my master and who grants what is thought of. All this praising and bowing that I do day after day, to the God who is lord of all the celestial ones, is done according to the discipline of taking God as master and oneself as his servant.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
காலையிலும் மாலையிலும் மனதால் வழிபாடு செய்து, அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து,
Morning and evening I will worship with the mind, and after that, as befits it, worship with the body as well,
- வரி 2Line 2
அவனையே சிந்தித்துக்கொண்டே இருப்பேன்; எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனும், நினைப்பதை அருளுபவனும் ஆகிய அவனுடைய திருவடிகளை,
and go on thinking of him; the sacred feet of the one who is ever my master and who grants what is thought of,
- வரி 3Line 3
போற்றி வணங்குவேன்; வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை நாள்தோறும் வணங்குவேன்.
these I will praise and bow to; day after day I will bow to the God who is lord of all the celestial ones.
- வரி 4Line 4
இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே, இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழிமுறையின்படியே ஆகும்.
All this praising and bowing that I do is done according to the discipline of taking God as master and oneself as his servant.
திருமந்திரம் பாடல் #1504





