திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1505

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லியுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்கண்ணவ னென்று கருது மவர்கட்குப்பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

உரை

அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை, அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களைச் சொல்லிப் போற்றி, தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து, உள்ளம் மகிழ்ந்து, தமக்குள் நிற்கின்ற அவனுடைய திருவடியைத் தொழுவார்கள். தமது கண்ணுக்குக் கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து, இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி, அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை, அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களைச் சொல்லிப் போற்றி,

  • வரி 2

    தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து, உள்ளம் மகிழ்ந்து, தமக்குள் நிற்கின்ற அவனுடைய திருவடியைத் தொழுவார்கள்.

  • வரி 3

    தமது கண்ணுக்குக் கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து,

  • வரி 4

    இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி, அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1505

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout