திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1506

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாசித்தும் பூசித்து மாமலர் கொய்திட்டும்பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்கில்மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலைநேசத் திருத்த நினைவறி யாரே.

உரை

இறைவனைப் போற்றிப் பாடினாலும், மந்திரங்களைச் செபித்தாலும், பூஜை செய்தாலும், அதிக அளவில் மலர்களைக் கொய்து வந்து சாற்றினாலும், பாசி படிந்த குளத்தில் விழுந்த கல்லைப் போலவே மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையைப் பார்த்தால், மாசு மரு எதுவும் இல்லாத தூய்மையான சோதியாக, நீல நிறக் கழுத்தைக் கொண்டு அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை, தங்களின் தூய்மையான அன்பில் வைத்து இருக்கும் எண்ணத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைப் போற்றிப் பாடினாலும், மந்திரங்களைச் செபித்தாலும், பூஜை செய்தாலும், அதிக அளவில் மலர்களைக் கொய்து வந்து சாற்றினாலும்,

  • வரி 2

    பாசி படிந்த குளத்தில் விழுந்த கல்லைப் போலவே மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையைப் பார்த்தால்,

  • வரி 3

    மாசு மரு எதுவும் இல்லாத தூய்மையான சோதியாக, நீல நிறக் கழுத்தைக் கொண்டு அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை,

  • வரி 4

    தங்களின் தூய்மையான அன்பில் வைத்து இருக்கும் எண்ணத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1506

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout