திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1507

தொடர்ந்து படிக்கread this section continuously

சாலோக மாதி சரிதாதியிற் பெறுஞ்சாலோக சாமீபந் தங்குஞ் சரிதையாமாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்பாலோக மில்லாப் பரனுரு வாகுமே.

உரை

இறைவன் இருக்கின்ற உலகத்தைச் சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய, சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும், இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய, சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும். இறைவன் இருக்கின்ற உலகத்தைச் சார்ந்தே இருக்கின்ற நிலையைப் பெற்று, அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது, சரியையைத் தொடர்ந்து முறைப்படிச் செய்துகொண்டே இருப்பதால் நமக்குக் கிடைக்கும். இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால், அதற்கு அடுத்த நிலையாகிய, இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும். அப்போது, இந்தப் பரந்து விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனேயே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் இருக்கின்ற உலகத்தைச் சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய, சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும், இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய, சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும்.

  • வரி 2

    இறைவன் இருக்கின்ற உலகத்தைச் சார்ந்தே இருக்கின்ற நிலையைப் பெற்று, அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது, சரியையைத் தொடர்ந்து முறைப்படிச் செய்துகொண்டே இருப்பதால் நமக்குக் கிடைக்கும்.

  • வரி 3

    இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால், அதற்கு அடுத்த நிலையாகிய, இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும்.

  • வரி 4

    அப்போது, இந்தப் பரந்து விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனேயே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.

திருமந்திரம் பாடல் #1507

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout