திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1508

தொடர்ந்து படிக்கread this section continuously

சமயங் கிரிதையிற் றன்மனங் கோயில்சமய மனுமுறை தானே விசேடஞ்சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

உரை

சமயம் எனப்படுவது, கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம், இறைவன் இருக்கின்ற இடத்தைச் சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும். சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழிமுறைகளாக இருப்பது, தன்னையே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்குச் செய்கின்ற கிரியைகளின் விசேடத்தினால், இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும். அந்தச் சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவைப் பெறுவது, சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும். சமயத்தில் அபிஷேகம் என்பது, தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில், அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    சமயம் எனப்படுவது, கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம், இறைவன் இருக்கின்ற இடத்தைச் சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும்.

  • வரி 2

    சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழிமுறைகளாக இருப்பது, தன்னையே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்குச் செய்கின்ற கிரியைகளின் விசேடத்தினால், இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும்.

  • வரி 3

    அந்தச் சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவைப் பெறுவது, சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும்.

  • வரி 4

    சமயத்தில் அபிஷேகம் என்பது, தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில், அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.

திருமந்திரம் பாடல் #1508

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout