திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1509

தொடர்ந்து படிக்கread this section continuously

பாசம் பசுவான தாகுமிச் சாலோகம்பாசம ருளான தாகுமிச் சாமீபம்பாசஞ் சிவமான தாகுமிச் சாரூபம்பாசங் கரைபதி சாயுச்சிய மாமே.

உரை

உலகப் பற்றுக்களானது ஆன்மாவாக இருக்கின்ற உயிர்களுக்குள் மாயையால் மறைத்து இருக்கும்போது, இறைவனை அடைய வேண்டும் என்று சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு, இந்த உலகத்திலேயே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும். அந்தச் சாதகத்தைத் தொடர்ந்து செய்யும்போது, உலகப் பற்றுக்கள் சிறிது சிறிதாக விலகி, இறையருள் பெருகித் தம்மை நிறைக்கும்; அதுவே இந்த உலகத்திலேயே இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையைக் கொடுக்கும். அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தைச் செய்யும்போது, உலகப் பற்றுக்கள் நீங்கி இறைவனின் மேல் பற்றுக் கொள்ளும்படியாகச் செய்து, தம்மையும் சிவமாகவே ஆகும்படிச் செய்து, இந்த உலகத்திலேயே இறைவனின் ஒளி உருவத்தைப் பெறுகின்ற நிலையைக் கொடுக்கும். அந்த நிலையிலும் மேன்மை பெற்றுச் சாதகத்தைத் தொடரும்போது, பற்றுக்கள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி, முக்திக்கு எல்லையாக இருக்கின்ற இறைவனிடம் சென்று சேரும்படிச் செய்து, இறைவனுடனேயே எப்போதும் இருக்கின்ற நிலையைக் கொடுக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    உலகப் பற்றுக்களானது ஆன்மாவாக இருக்கின்ற உயிர்களுக்குள் மாயையால் மறைத்து இருக்கும்போது, இறைவனை அடைய வேண்டும் என்று சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு, இந்த உலகத்திலேயே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும்.

  • வரி 2

    அந்தச் சாதகத்தைத் தொடர்ந்து செய்யும்போது, உலகப் பற்றுக்கள் சிறிது சிறிதாக விலகி, இறையருள் பெருகித் தம்மை நிறைக்கும்; அதுவே இந்த உலகத்திலேயே இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையைக் கொடுக்கும்.

  • வரி 3

    அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தைச் செய்யும்போது, உலகப் பற்றுக்கள் நீங்கி இறைவனின் மேல் பற்றுக் கொள்ளும்படியாகச் செய்து, தம்மையும் சிவமாகவே ஆகும்படிச் செய்து, இந்த உலகத்திலேயே இறைவனின் ஒளி உருவத்தைப் பெறுகின்ற நிலையைக் கொடுக்கும்.

  • வரி 4

    அந்த நிலையிலும் மேன்மை பெற்றுச் சாதகத்தைத் தொடரும்போது, பற்றுக்கள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி, முக்திக்கு எல்லையாக இருக்கின்ற இறைவனிடம் சென்று சேரும்படிச் செய்து, இறைவனுடனேயே எப்போதும் இருக்கின்ற நிலையைக் கொடுக்கும்.

திருமந்திரம் பாடல் #1509

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout