திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1510

தொடர்ந்து படிக்கread this section continuously

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்தங்குஞ் சன்மார்கந் தனிலன்றிக் கைகூடாவங்கத் துடல்சித்த சாதன ராகுவரிங்கிவ ராகவிழி வற்ற யோகமே.

உரை

நிலைபெற்ற இறை உருவம் என்பது, சாதகர்கள் அட்டாங்க யோகத்தில் எட்டாவது யோகமாகிய சமாதி நிலையில் கிடைப்பதாகும். நிலைபெற்ற உண்மை வழிமுறையாக இருக்கின்ற, இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை அல்லாமல் வேறு எதனாலும் சாதகர்களுக்கு இந்தச் சமாதி நிலை கிடைக்காது. இந்தச் சமாதி நிலையை அடைந்த சாதகரின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறைவனையே நினைத்துச் செயலாற்றிக்கொண்டு இருக்கின்ற, சித்த நிலை பெற்ற சாதகராக அவர் ஆகிவிடுவார். இதன் பயனால், இந்த உலகத்திலேயே இந்தச் சாதகர் தாமே ஒரு குற்றமும் இல்லாத தூய்மையான யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    நிலைபெற்ற இறை உருவம் என்பது, சாதகர்கள் அட்டாங்க யோகத்தில் எட்டாவது யோகமாகிய சமாதி நிலையில் கிடைப்பதாகும்.

  • வரி 2

    நிலைபெற்ற உண்மை வழிமுறையாக இருக்கின்ற, இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை அல்லாமல் வேறு எதனாலும் சாதகர்களுக்கு இந்தச் சமாதி நிலை கிடைக்காது.

  • வரி 3

    இந்தச் சமாதி நிலையை அடைந்த சாதகரின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறைவனையே நினைத்துச் செயலாற்றிக்கொண்டு இருக்கின்ற, சித்த நிலை பெற்ற சாதகராக அவர் ஆகிவிடுவார்.

  • வரி 4

    இதன் பயனால், இந்த உலகத்திலேயே இந்தச் சாதகர் தாமே ஒரு குற்றமும் இல்லாத தூய்மையான யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்.

திருமந்திரம் பாடல் #1510

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout