திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1511

தொடர்ந்து படிக்கread this section continuously

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதேதயிலம தாகுஞ் சராசரம் போலப்பயிலுங் குருவின் பதிபுக்க போதேகயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

உரை

இறைவன் இருக்கின்ற தர்ம உலகத்தைச் சாதகர் சார்ந்து இருக்கும்போதே, அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்குச் சாந்து பூசியது போல அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும் அவரைச் சுற்றி இருக்கின்றது போலவே, அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும்படி ஆகிவிடும். அது போலவே, தமக்குக் கற்றுக்கொடுக்கின்ற, இறைவனை உணர்ந்த ஞானகுருவின் இடத்திற்குள் சாதகர் நுழைந்த போதே, கயிலாய மலையில் வீற்றிருக்கின்ற இறைவனின் ஒளி பொருந்திய உருவமாகவே சாதகரும் ஆகிவிடுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் இருக்கின்ற தர்ம உலகத்தைச் சாதகர் சார்ந்து இருக்கும்போதே,

  • வரி 2

    அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்குச் சாந்து பூசியது போல அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும் அவரைச் சுற்றி இருக்கின்றது போலவே, அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும்படி ஆகிவிடும்.

  • வரி 3

    அது போலவே, தமக்குக் கற்றுக்கொடுக்கின்ற, இறைவனை உணர்ந்த ஞானகுருவின் இடத்திற்குள் சாதகர் நுழைந்த போதே,

  • வரி 4

    கயிலாய மலையில் வீற்றிருக்கின்ற இறைவனின் ஒளி பொருந்திய உருவமாகவே சாதகரும் ஆகிவிடுவார்.

திருமந்திரம் பாடல் #1511

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout