திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1512

ஐந்தாம் தந்திரம்16. சாயுச்சியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சைவச் சிவனுடன் சம்பந்த மாவதுசைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்சைவச் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல்சைவச் சிவானந்தஞ் சாயுச்சிய மாமே.

உரை

சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில், இறைவனுடன் நெருங்கிய உறவினர் போலத் தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும். இந்த நிலையை அடைவதற்கு, அந்த வழிமுறையின் மூலம் இறைவனை அறிந்துகொண்டு, இறைவனை மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும். அந்தத் தர்மத்திலேயே சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு, தாம் எனும் எண்ணத்தைச் சார்ந்து இருப்பதை நீக்கிவிட்டு, தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும். அந்தத் தர்மத்தின் பயனால், சிவப் பரம்பொருளின் மேலான பேரின்பத்தைப் பெற்று அதிலேயே மூழ்கி, இறைவனுடனேயே எப்போதும் சேர்ந்தே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில், இறைவனுடன் நெருங்கிய உறவினர் போலத் தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும்.

  • வரி 2

    இந்த நிலையை அடைவதற்கு, அந்த வழிமுறையின் மூலம் இறைவனை அறிந்துகொண்டு, இறைவனை மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும்.

  • வரி 3

    அந்தத் தர்மத்திலேயே சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு, தாம் எனும் எண்ணத்தைச் சார்ந்து இருப்பதை நீக்கிவிட்டு, தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும்.

  • வரி 4

    அந்தத் தர்மத்தின் பயனால், சிவப் பரம்பொருளின் மேலான பேரின்பத்தைப் பெற்று அதிலேயே மூழ்கி, இறைவனுடனேயே எப்போதும் சேர்ந்தே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்.

திருமந்திரம் பாடல் #1512

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout