திருமூலர் அருளிய திருமந்திரம்
10. அட்டாங்க யோகப் பேறு

மூன்றாம் தந்திரம் பாடல் 632–639 (8 பாடல்கள்)

போதுகந் தேறும் புரிசடை யானடியாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடுமாதுகந் தாடிடு மால்விடை யோனே.

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்கற்றிருந் தாங்கே கருது மவர்கட்குமுற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்தருந்தண் முழவங் குழலும் இயம்பஇருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ளஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்லஇன்பக் கலவி இருக்கலு மாமே.

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்ஆரிவன் என்ன அரனாம் இவனென்னஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடைஇல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.

காரிய மான உபாதியைத் தான்கடந்தாரிய காரணம் ஏழுந்தன் பாலுறவாரிய காரண மாயத் தவத்திடைத்தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #632

1 / 8

0:000:00
10. அட்டாங்க யோகப் பேறுபாடல் 632

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com