தொடர்ந்து படிக்கread this section continuously
தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.
உரைmeaning
ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமை கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்துத் தியானம் செய்பவர்களுக்குள் அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன், சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.
Shiva, who stands possessed of the strength to bear all seven worlds, and who dwells melted like nectar within those who hold him in the mind and meditate, takes those who attain the state of samadhi as his own dwelling, and stands as their support.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமை கொண்டு நிற்பவன் இறைவன்.
Shiva stands possessed of the strength to bear all seven worlds.
- வரி 2Line 2
இறைவனை மனதில் வாங்கிக்கொண்டு நிற்கவல்லவர்களுக்கு அவன் வலிமையாக நின்று இருக்கின்றான்.
For those able to hold him drawn into the mind, he stands as their strength.
- வரி 3Line 3
இறைவனை மனதில் வைத்துத் தியானம் செய்பவர்களுக்குள் அமுதமாய் லயித்திருப்பவனும் அவனே.
And he is the one who dwells melted like nectar within those who hold him in the mind and meditate.
- வரி 4Line 4
அப்படிச் சமாதி நிலையை அடையவல்லவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.
He takes those who are able to attain that state of samadhi as his own dwelling, and stands as their support.
திருமந்திரம் பாடல் #638





