பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.
ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறியசீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுருவந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
ஈச னடியார் இதயங் கலங்கிடத்தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்நாசம தாகுமே நந்நந்தி யாணையே.
சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காதுதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டுமெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #530
1 / 7




