திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 530

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

உரை

ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள், அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாகப் பேசுபவர்கள் ஆகிய இவர்கள், ஞானமில்லாமல் கல்வியை மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள். ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?

வரி வாரியாக

  • வரி 1

    ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள்,

  • வரி 2

    அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாகப் பேசுபவர்கள்,

  • வரி 3

    ஞானமில்லாமல் கல்வியை மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள்.

  • வரி 4

    ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?

திருமந்திரம் பாடல் #530

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout