திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 533

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுருவந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

உரை

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் நிலைத்து பெரிய தவங்களைச் செய்த மாதவர்களின் மனம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள், பசியால் வருந்தி அலைகின்ற நாயாகப் பிறந்து, பின்னர் மனிதப் பிறவி எடுத்தாலும் எண்ணில் அடங்காத தாழ்ந்த பிறவிகள் பல எடுத்து மண்ணில் மாய்வர்.

வரி வாரியாக

  • வரி 1

    ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் நிலைத்து பெரிய தவங்களைச் செய்த மாதவர்களின் மனம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள்,

  • வரி 2

    பசியால் வருந்தி அலைகின்ற நாயாகப் பிறந்து,

  • வரி 3

    பின்னர் மனிதப் பிறவி எடுத்தாலும் எண்ணில் அடங்காத தாழ்ந்த பிறவிகள் பல எடுத்து,

  • வரி 4

    மண்ணில் மாய்வர்.

திருமந்திரம் பாடல் #533

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout