திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 534

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈச னடியார் இதயங் கலங்கிடத்தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்நாசம தாகுமே நந்நந்தி யாணையே.

உரை

சிவனடியார்களின் மனம் கலங்கினால், அவர்கள் வாழும் நாடும் அது தேடிச் செல்லும் சிறப்புகளும் அழிந்துவிடும். அதோடு நில்லாமல், அதற்குப் பொறுப்பானவர்களாகிய இந்திரனுடைய ஆட்சிப் பீடமும் பேரரசர்களுடைய ஆட்சிப் பீடமும் நாசமாகிவிடும்; இது நந்தியாகிய சிவபெருமானின் ஆணை.

வரி வாரியாக

  • வரி 1

    சிவனடியார்களின் மனம் கலங்கினால்,

  • வரி 2

    அவர்கள் வாழும் நாடும் அது தேடிச் செல்லும் சிறப்புகளும் அழிந்துவிடும்.

  • வரி 3

    அதோடு நில்லாமல், அதற்குப் பொறுப்பானவர்களாகிய இந்திரனுடைய ஆட்சிப் பீடமும் பேரரசர்களுடைய ஆட்சிப் பீடமும் நாசமாகிவிடும்,

  • வரி 4

    இது நந்தியாகிய சிவபெருமானின் ஆணை.

திருமந்திரம் பாடல் #534

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout