தொடர்ந்து படிக்கread this section continuously
சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காதுதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
உரைmeaning
உண்மையான ஞான வழியைக் காட்டிய சற்குருவின் முன்னிலையில் பொய் பேசினால், இருக்கும் நல்லொழுக்கம் குன்றிப் போவதோடு, அவர் கொடுத்த ஞானமும் நிலைக்காமல் அழிந்துவிடும். தொன்றுதொட்டு வழிவழியாய் வந்த ஞானத்தை அடையும் வழிமுறைகளும் மறக்கப்பட்டு, ஆன்ம வளர்ச்சிக்கான மற்ற வழிகளும் கெட்டு, வறுமையே மிஞ்சும்.
If one speaks falsely before the true guru who showed the path of true knowledge, the good conduct one has will diminish, and the knowledge given by that guru too will not remain but will perish. The ways of attaining knowledge that have come down age after age from ancient times will be forgotten, the other paths for the growth of the soul will also be ruined, and only poverty will remain.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நல்வழியைக் காட்டிய சற்குருவின் முன்னிலையில் பொய் பேசினால்,
If falsehood is spoken before the true guru who showed the good path,
- வரி 2Line 2
இருக்கும் நல்லொழுக்கம் குன்றிப் போவதோடு, அவர் கொடுத்த ஞானமும் நிலைக்காமல் அழிந்துவிடும்.
the good conduct one has will diminish, and the knowledge given will not remain.
- வரி 3Line 3
தொன்றுதொட்டு வழிவழியாய் வந்த, அந்த ஞானத்தை அடையும் வழிமுறைகளும் மறக்கப்பட்டுவிடும்.
The ancient ways of attaining that knowledge, come down age after age, will be forgotten,
- வரி 4Line 4
ஆன்ம வளர்ச்சிக்கான மற்ற வழிகளும் கெட்டு, வறுமையே மிஞ்சும்.
the other paths of the soul's growth will also be ruined, and only poverty will remain.
திருமந்திரம் பாடல் #535





