தொடர்ந்து படிக்கread this section continuously
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
உரைmeaning
இல்லறத்தில் இருக்கும் ஞானிகள் மற்றும் இறை தத்துவத்தை உணர்ந்த ஞானிகளை, அவர்களுடைய மனம் வருந்தும்படி தீங்கு செய்தவர்களின் சொத்துக்களும் உயிரும் ஒரே ஆண்டில் அழிந்துவிடும். இது உண்மை, இதுவே சதாசிவத்தின் ஆணை.
The wealth and the life of those who wrong householder sages and sages who have realized the divine truth, wounding their mind, will perish within a single year. This is the truth, and this is the command of Sadashivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இல்லறத்தில் இருக்கும் ஞானிகள் மற்றும் இறை தத்துவத்தை உணர்ந்த ஞானிகளை,
Householder sages and sages who have realized the divine truth,
- வரி 2Line 2
அவர்களுடைய மனம் வருந்தும்படி தீங்கு செய்தவர்கள்,
those who wrong them, wounding their mind,
- வரி 3Line 3
அவர்களின் சொத்துக்களும் உயிரும் ஒரே ஆண்டில் அழிந்துவிடும்.
the wealth and the life of such wrongdoers will perish within a single year.
- வரி 4Line 4
இது உண்மை, இதுவே சதாசிவத்தின் ஆணை.
This is the truth, and this is the command of Sadashivam.
திருமந்திரம் பாடல் #532





