திருமூலர் அருளிய திருமந்திரம்
23. மாகேசுர நிந்தை

இரண்டாம் தந்திரம் பாடல் 537–538 (2 பாடல்கள்)

ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றேஞானியை வந்திப் பவனுமே நல்வினையான கொடுவினை தீர்வா ரவன்வயம்போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

திருமந்திரம் பாடல் #537

1 / 2

0:000:00
23. மாகேசுர நிந்தைபாடல் 537

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout