தொடர்ந்து படிக்கread this section continuously
ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.
உரைmeaning
உலகப் பற்றுகள் எதுவும் இல்லாத சிவனடியார்கள், யாருக்குத்தான் பகைவராக இருக்க முடியும்? தங்கள் வயிற்றுப் பசிக்காக பிச்சை எடுத்து உண்ணும் அந்த அடியவர்களை, தாமே கொண்ட வெறுப்பினால் இகழ்ந்து பேசுகிறவர்கள், தாமே தேடிக்கொண்ட தீவினையால் நரகங்களிலேயே மிகவும் கொடியதான கடைசி நிலை நரகத்தில் சென்று விழுவார்கள்.
Shiva's devotees, who have no attachment at all to worldly people, to whom could they possibly be enemies? Those who, out of the hatred they themselves hold, speak scornfully of those devotees who beg and eat only to still the hunger of their own bellies, will, by the evil they themselves have brought upon themselves, fall into the harshest and lowest level of hell among the hells.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகப் பற்றுகள் எதுவும் இல்லாத ஆண்டவனின் அடியவர்கள், யாருக்குமே பகைவராக இருப்பதில்லை.
The Lord's devotees, who have no worldly attachment, are enemies to no one at all,
- வரி 2Line 2
ஆண்டவனின் அடியவர்கள் தங்கள் வயிற்றுப் பசியை ஆற்றிக்கொள்ளவே பிச்சை ஏற்று உண்பவர்கள்.
for the Lord's devotees only beg and eat to still their own hunger.
- வரி 3Line 3
தாமே கொண்ட வெறுப்பினால் அந்த அடியவர்களை இகழ்ந்து பேசுகிறவர்கள்,
Those who, out of hatred, speak scornfully of the Lord's devotees,
- வரி 4Line 4
தாமே தேடிக்கொண்ட தீவினையால், நரகங்களிலேயே மிகக் கொடியதான கடைசி நிலை நரகத்தில் சென்று விழுவார்கள்.
will themselves fall, by the evil they brought on themselves, into the lowest and harshest hell.
திருமந்திரம் பாடல் #537





