திருமூலர் அருளிய திருமந்திரம்
21. சிவ நிந்தை

இரண்டாம் தந்திரம் பாடல் 526–529 (4 பாடல்கள்)

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளேஅளிவுறு வாரம ராபதி நாடிஎளியனென் றீசனை நீசர் இகழில்கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

அப்பகை யாலே அசுரருந் தேவரும்நற்பகை செய்து நடுவே முடிந்தனர்எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

போகமும் மாதர் புலவி யதுநினைந்தாகமும் உள்கலந் தங்குள ராதலில்வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்றநீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

திருமந்திரம் பாடல் #526

1 / 4

0:000:00
21. சிவ நிந்தைபாடல் 526

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout