திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 526

தொடர்ந்து படிக்கread this section continuously

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளேஅளிவுறு வாரம ராபதி நாடிஎளியனென் றீசனை நீசர் இகழில்கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.

உரை

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து, தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள். தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானைச் சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால், அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து,

  • வரி 2

    தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள்.

  • வரி 3

    தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானைச் சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால்,

  • வரி 4

    அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.

திருமந்திரம் பாடல் #526

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout