திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 525

இரண்டாம் தந்திரம்20. அதோமுக தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அதோமுக மாமல ராயது கேளும்அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்துஅதோமுக மாகிய அந்தமில் சத்திஅதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

உரை

அதோமுகம் பெரிய தாமரை மலராக மாறிய அதிசயத்தைக் கேளுங்கள். எழுந்த சக்தி, உயிர்களின் தலையின் உச்சியை அடைந்து நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலராக விரிந்தவுடன், அழிவில்லாத சக்தியாகி, அந்தச் சிவபெருமானே அதோமுகமாகி அமர்ந்திருக்கின்றார்.

வரி வாரியாக

  • வரி 1

    அதோமுகம் பெரிய தாமரை மலராக மாறிய அதிசயத்தைக் கேளுங்கள்.

  • வரி 2

    எழுந்த சக்தி உயிர்களின் தலையின் உச்சியை அடைந்து நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலராக விரியும்.

  • வரி 3

    அவ்வாறு விரிந்தவுடன் அழிவில்லாத சக்தியாகும்.

  • வரி 4

    அந்தச் சிவபெருமானே அதோமுகமாகி அமர்ந்திருக்கின்றார்.

திருமந்திரம் பாடல் #525

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout