எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்றுவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்லஅம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
பாடல் 520 — உரைVerse 520 — meaning
தேவர்களை விட அசுரர்கள் வலிமை பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்திட, தேவர்கள் சிவபெருமானை நோக்கி, எம்பெருமானே இறைவா, நாங்கள் அசுரர்களால் துன்பப்படுகின்றோமே, இது சரியா, எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறி வேண்டினர். சிவபெருமான் தற்பரன் நிலையில் நின்று, தன் இதயத்திலிருக்கும் ஒளியாகிய அழகிய பவளம் போன்ற திருமேனியுடைய ஆறுமுகனை, யாம் அளிக்கும் படையுடன் சென்று தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்து வருவாயாக என்று கூறினார்.
When the asuras grew stronger than the gods and began to torment them, the gods went before Shiva and pleaded, our lord, our God, we suffer at the hands of the asuras, is this right, save us. Shiva, standing in his state as thatparan, spoke to Arumugan, of coral like radiant form, the light within his own heart, and said, go with the army we grant you and destroy the asuras, the enemies of the gods.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தேவர்களை விட அசுரர்கள் வலிமை பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்திட,
When the asuras grew stronger than the gods and began to torment them,
- வரி 2Line 2
தேவர்கள் சிவபெருமானை நோக்கி, எம்பெருமானே இறைவா, நாங்கள் அசுரர்களால் துன்பப்படுகின்றோமே, இது சரியா, எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறி வேண்டினர்.
the gods went before Shiva and pleaded, our lord, our God, we suffer at the hands of the asuras, is this right, save us.
- வரி 3Line 3
சிவபெருமான் தற்பரன் நிலையில் நின்று, தன் இதயத்திலிருக்கும் ஒளியாகிய அழகிய பவளம் போன்ற திருமேனியுடைய ஆறுமுகனிடம்,
Shiva, standing in his state as thatparan, spoke to Arumugan, of coral like radiant form, the light within his own heart,
- வரி 4Line 4
யாம் அளிக்கும் படையுடன் சென்று தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்து வருவாயாக என்று கூறினார்.
and said, go with the army we grant you and destroy the asuras, the enemies of the gods.




