தொடர்ந்து படிக்கread this section continuously
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்மெய்யே யுரைத்திடில் விண்ணோர்தொழச் செய்வன்மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.
உரைmeaning
செழுமையான கடல்களால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு, மனிதர்களில் யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி இல்லாமல் பொய்யாகப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்பது நன்றாகத் தெரியும். யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி கொண்டு போற்றி வணங்குகின்றார்களோ, அவர்களை வானுலகத்துத் தேவர்களும் வந்து வணங்கச் செய்வான், அதோமுகம் கொண்ட கருத்த தொண்டையை உடைய இறைவன்.
The God who created this world surrounded by fertile seas well knows which among men praise and extol him falsely, without true devotion toward him. Whoever holds true devotion toward him and praises and worships him, that God with the Adhomukham face and the dark throat will make even the gods of the heavens come and worship them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
செழுமையான கடல்களால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு,
To the God who created this world surrounded by fertile seas,
- வரி 2Line 2
மனிதர்களில் யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி இல்லாமல் பொய்யாகப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்பது நன்றாகத் தெரியும்.
it is well known which among men praise and extol him falsely, without true devotion toward him.
- வரி 3Line 3
யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி கொண்டு போற்றி வணங்குகின்றார்களோ,
Whoever holds true devotion toward him and praises and worships him,
- வரி 4Line 4
அவர்களை வானுலகத்துத் தேவர்களும் வந்து வணங்கச் செய்வான், அதோமுகம் கொண்ட கருத்த தொண்டையை உடைய இறைவன்.
that God with the Adhomukham face and the dark throat will make even the gods of the heavens come and worship them.
திருமந்திரம் பாடல் #522





