திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 527

தொடர்ந்து படிக்கread this section continuously

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

உரை

ஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்களும், தேவர்களும் அசுரர்களும் ஆகிய அனைவரும், உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே. அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்களும் தேவர்களும் அசுரர்களும்,

  • வரி 2

    உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே.

  • வரி 3

    அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து,

  • வரி 4

    அப்படி வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.

திருமந்திரம் பாடல் #527

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout