திருமூலர் அருளிய திருமந்திரம்
4. ஆதனம்

மூன்றாம் தந்திரம் பாடல் 558–563 (6 பாடல்கள்)

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்தங்க இருப்பத் தலைவனு மாமே

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்தரிய முழந்தாளில் கைகளை நீட்டிஉருகி யிடுமுடற் செவ்வே யிருத்திப்பரிசு பெற்றிடில் பத்திரா சனமே.

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டுமுக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்குக்குட ஆசனமுங் கொள்ளலு மாமே.

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டிஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரிசொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்பத்தொடு நூறு பலஆ சனமே.

திருமந்திரம் பாடல் #558

1 / 6

0:000:00
4. ஆதனம்பாடல் 558

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout