திருமூலர் அருளிய திருமந்திரம்
3. நியமம்

மூன்றாம் தந்திரம் பாடல் 555–557 (3 பாடல்கள்)

ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்நீதியை உணர்ந்து நியமத்த னாமே.

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வைவாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவைகாமம் களவு கொலையெனக் காண்பவைநேமியீ ரைந்து நியமத்த னாமே.

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்விமகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்துநிவம்பல செய்யின் நியமத்த னாமே.

திருமந்திரம் பாடல் #555

1 / 3

0:000:00
3. நியமம்பாடல் 555

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout