திருமூலர் அருளிய திருமந்திரம்
2. இயமம்

மூன்றாம் தந்திரம் பாடல் 553–554 (2 பாடல்கள்)

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடேஅழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்நல்லான் அடக்க முடையான் நடுச்செய்யவல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்இல்லா னியமத் திடைநின் றானே.

திருமந்திரம் பாடல் #553

1 / 2

0:000:00
2. இயமம்பாடல் 553

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout